இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் லோன்களை தள்ளுபடி செய்கிறோம் என்ற போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இப்படியான போலி விளம்பரங்களை செய்து அதன் மூலம் பலர் சர்வீஸ் சார்ஜ் பெரும் மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான செயல்கள் வங்கிகள் மீதான நம்பகத் தன்மையை குலைக்கும் என்றும் வங்கிகள் போலி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.