இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள அளவைவிட வருமான வருவாய் ஈட்டும் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். அதில் வணிக காரணங்களுக்காக பதிவு செய்துள்ள நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு தொகையை விட குறைவான வருவாய் ஈட்டும்போது வருமானவரி தாக்கல் செய்துவிட்டு அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வருமான வரி ரிட்டன் அல்லது ரீபண்ட் பெற்றுக் கொள்ளலாம். இந்த நிலையில் வருமான வரித்துறை தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி தொழில்நுட்ப காரணங்களால் வருமான வரி ரிட்டன் நிலுவையில் உள்ளவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் வருமானவரி செலுத்துவோர் கணக்கில் உள்ள நிலுவை தொகைகளை வழங்க உள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணத்தை திரும்ப செலுத்த உரிய நபர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்கள் தெரிவிக்கப்படும் எனவும் வருமான வரித்துறையின் கணக்கீடுகளுடன் வரி செலுத்துவோர் செய்த கணக்கீடுகள் பொருந்தினால் மட்டும் பணத்தை திரும்ப பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.