போன் பே, கூகுள் பே போன்ற பணப் பரிமாற்ற தளத்தை காட்டிலும் யுபிஐ தளத்தில் எந்த ஒரு இடையூறுமே இல்லாமல் எளிமையாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் யுபியை பின் பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  சில பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தார். மீண்டும் மீண்டும் பணம் செலுத்துவதற்கான மின்-ஆர்டர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய யுபிஐ பரிவர்த்தனை வரம்பு விதிகளின் கீழ், மக்கள் முந்தைய ரூ.1 லட்சத்திற்கு பதிலாக ரூ.5 லட்சத்தை யுபிஐ மூலம் செலுத்தலாம்.