இந்தியாவில் மக்கள் பலரும் தற்போது அதிக அளவு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட யுபிஐ செய்திகளை பயன்படுத்தி வருவதால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சில பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி மீண்டும் மீண்டும் பணம் செலுத்துவதற்கான மின் ஆர்டர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய யுபிஐ பரிவர்த்தனை வரம்பு விதிகளின் கீழ் மக்கள் முந்தைய ஒரு லட்சத்திற்கு பதிலாக 5 லட்சம் ரூபாய் வரை யு பி ஐ மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.