
கோடை காலம் வந்துவிட்டால் சாலை ஓரத்தில் அதிக அளவில் தர்பூசணி கடைகளை நம்மால் பார்க்க முடியும். உடனே நாமும் அதனை வாங்கி ருசித்து சாப்பிடுவோம். ஆனால் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில், தர்பூசணி வியாபாரிகள் பழங்களுக்கு ஊசி மூலம் கலர் சாயம் ஏற்றுகின்றனர். இதனைப் பார்த்த போலீசார் அந்த வியாபாரியை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே தர்பூசணி பழங்களை வாங்கும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.