தென் இந்தியாவின் வளி மண்டலத்தில் கிழக்கு காற்றும் மேற்கு காற்றும் சந்திக்கிறது. இதன் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மே 1ஆம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.