பெங்களூரில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. பெங்களூர் நகரில் சுமார் 900 மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக பெங்களூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3565 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 1000 பேரை சந்தேகத்தின் பேரில் டெங்கு பரிசோதனைக்கு அனுப்பியதாகவும் அதில் 900 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவிலும் மழைக்கால நோய்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.