இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்படாத 70 சதவீதத்திற்கும் அதிகமான ஆன்டிபயாட்டிக் FDC மருந்து வகைகள் சாதாரண மருந்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட சாதாரண உடல் கோளாறுகளை கூட சரி செய்யாத இந்த மருந்துகளை மத்திய அரசு தடை செய்தும் சில மருந்து கடைகளில் இன்னும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் இந்த மருந்துகளை பாக்டீரியா தொற்றுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சில நேரங்களில் மருந்து கடைகளில் வைரஸ் தொற்றுக்கும் இந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதால் பெரிதளவில் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறிய காய்ச்சல் மற்றும் தலைவலி என்றாலும் கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிடாமல் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.