கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து கொண்டு சபரிமலைக்கு செல்வது தான் வழக்கம். அதே சமயம் ஒவ்வொரு வருடமும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி தேங்காய் பைகளை விமானத்தில் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நீண்ட நாட்களாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய விமான போக்குவரத்து துறை இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி வரை பாதுகாப்பு சோதனைக்கு உட்பட்டு இருமுடி பைகளை எடுத்துச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.