இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் பிங்க் எனும் பெயரில் வாட்ஸ் அப் லோகோவின்பச்சை நிறத்தை இளசிவப்பு நிறமாக மாற்றுவதாக கூறும் லிங்க் ஒன்று வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஆனால் இது போலியான லிங்க் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மொபைல் பயனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. எந்த மொபைல் அப்டேட்டும் ப்ளே ஸ்டோரில் மட்டுமே வரும். லிங்க் வடிவில் வராது. இதுபோன்ற லிங்க் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. தவறுதலாக திறக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.