பல்வேறு நாடுகளில் இருந்து வரும் போலி கூரியர் சேவை நிறுவனங்கள் மூலம் மக்களை ஏமாற்றும் சைபர் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடி கும்பல்கள், பொதுமக்களுக்கு அவர்களின் பெயரில் வெளிநாடுகளில் இருந்து பார்சல் வந்துள்ளதாகவும், அதில் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிப்பார்கள்.

பின்னர், போலீஸ் விசாரணை நடப்பதாகவும், மேலும் விவரங்களுக்கு ஸ்கைப் மூலம் போலி அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கூறுவார்கள். இந்த போலி அதிகாரிகள் உண்மையான போலீஸ் அதிகாரிகளைப் போல் நடித்து மக்களை ஏமாற்றுவார்கள். இதன் மூலம் பல்வேறு காரணங்களைக் காட்டி பணத்தை மோசடி செய்துவிடுவார்கள்.

இது தொடர்பாக புனேயில் உள்ள போலீஸ் சைபர் கிரைம் பிரிவு ஒரு வழக்கை விசாரணை செய்து வந்தனர். அந்த வழக்கில் ஒரு பெண்ணிடம் இருந்து 25 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சைபர் குற்றவாளிகளுக்கு பணத்தை மாற்றி விடுவதுடன், 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அவர்கள் உங்களிடம் இதுமாதிரி கூறுவார்கள், உங்களுடைய பயம் தான், அவர்கள் பலம் ஆகையால் இது மாதிரி அழைப்புகள் வந்தால் காவல் துறையினருக்கு தெரியப்படுத்துக்கள். அல்லது அந்த அழைப்பை தவிர்த்து விடுங்கள்….  இந்த வகையான மோசடிகளில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.