இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் தினந்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பெங்களூருவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில் 12600 சைபர் கிரைம் குற்றங்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலமாக 470 கோடியை பலபேர் இழந்துள்ளதாகவும் முக்கியமாக ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி 204 கோடி மோசடி நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது ஆன்லைன் ஜாப் மோசடி மூலம் தினசரி 1.71 கோடி வரை மர்ம நபர்கள் ஏமாற்றி வந்துள்ளனர். எனவே மக்கள் இது போன்ற மோசடிகளில் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.