இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இப்படியான நிலையில் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து விடுகின்றனர். இதனால் ஆதார் கார்டை தேவையில்லாமல் யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் முக்கிய தேவைகளுக்காக ஆதார் கார்டு அனுப்பும்போது நம்பகத் தன்மை வாய்ந்த நிறுவனமா என்பதை உறுதி செய்த பிறகு தான் அனுப்ப வேண்டும். ஆதார் கார்டை பாதுகாக்க இந்திய தனித்து அடையாள ஆணையத்தின் சார்பாக மாஸ்க் ஆதார் என்ற வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள நிலையில் இதன் மூலம் ஆதார் கார்டில் கடைசி சில எண்கள் மறைக்கப்பட்டிருக்கும். இந்த மாஸ்க் ஆதார் கார்டை பயன்படுத்துவதால் சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்த ஆதார் கார்டை ஆதாரம் அமைப்பின் அதிகாரப்பூர்வை இணையதளமான https://uidai.gov.in/ என்ற இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.