இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் மாதம் தோறும் தங்களது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை பி எப் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்களுடைய சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து பிஎப் பணத்தை டெபாசிட் செய்யும். இதில் செலுத்தப்பட்ட பணத்தைப் பொறுத்து வருடாந்திர வட்டி உங்களுக்கு கிடைக்கும். சில நேரத்தில் பிஎப் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது என்பதை நம்மால் சரி பார்க்க முடியாது. இதனால் உங்களுக்கு இழப்பு ஏற்படும். எனவே உங்களுடைய கணக்கில் பணம் உள்ளதா என்பதை நீங்களே எளிதில் சரி பார்க்கலாம்.

  • அதற்கு முதலில் EPFO போர்ட்டல் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற பக்கத்திற்கு சென்று உங்களுடைய UAN நம்பரை ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும்.
  • வெப்சைட் திறக்கப்பட்டதும் our services ஆப்சனுக்கு சென்று பணியாளர்களுக்கான கீழ்தோன்றும் மெனுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பிறகு சேவைகள் வரிசையின் கீழ் உறுப்பினர் பாஸ்புக்கைக் கிளிக் செய்ய செய்து  UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.
  • பிறகு கேப்ட்சாவை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
  • உள்நுழைந்த பிறகு உறுப்பினர் ஐடியை உள்ளிட வேண்டும்.
  • உங்கள் PF பேலன்ஸ் தொகை இப்போது காட்டப்படும்.
  • அனைத்து வைப்புத்தொகைகள், ஐடி, உறுப்பினர் ஐடி, அலுவலகத்தின் பெயர், பணியாளர் பங்கு மற்றும் முதலாளி பங்கு உள்ளிட்ட அனைத்து விவரங்கள் இதில் காட்டப்படும்.