இந்தியாவில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் வழங்குகின்றது. இது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். வாக்களிப்பதற்கு மட்டுமல்ல தனிப்பட்ட வேலைகளுக்கும் அரசு சம்பந்தமான வேலைகளுக்கும் இந்த வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படுகிறது.

இதில் உள்ள உங்களுடைய புகைப்படத்தை அப்டேட் செய்ய வேண்டும் என்றால் இணையதளத்தில் மாநிலத்தின் வாக்காளர் சேவை பக்கத்திற்கு சென்று உங்களுடைய வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்களை நீங்கள் மேற்கொள்ளலாம். இதில் புகைப்படத்தை மாற்றுவதற்கு படிவம் 8ஐ தேர்ந்தெடுத்து கேட்கப்படும் தகவல்களை நிரப்பி புதிய புகைப்படத்தை நீங்கள் உள்ளிட வேண்டும். சரிபார்த்தலுக்கு பின்னர் புகைப்படம் மாற்றப்படும்.