இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் மோசடிக்காரர்கள் புதுவித யுக்திகளை பயன்படுத்தி மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில் புதுவிதம் மோசடி சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது டெல்லியில் தபசு என்ற பெண் மருத்துவரை சந்திக்க கூகுளில் உள்ள கிளினிக் எண்ணுக்கு அழைத்துள்ளார்.

ஆனால் இணைக்கப்படவில்லை. பின்னர் ஒருவர் போன் செய்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஐந்து ரூபாய் அனுப்ப லிங்க் அனுப்பியுள்ளார். பணம் அனுப்ப முயன்ற போது பணம் செலுத்த முடியவில்லை. சிறிது நேரம் கழித்து அவரின் வங்கி கணக்கில் 60 ஆயிரம் ரூபாய் பிடிக்கும் செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அவர் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதால் மக்கள் இது போன்ற மோசடிக்காரர்களை நம்பி ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.