நாட்டில் இன்ஃப்ளுயன்சா ஏ துணைவகை எச்3 என் 2 வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. தினம்தோறும் இந்த புதுவித வைரசால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த புதுவகை வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் Oseltamivir மருந்தை பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கும். இந்த புதுவித வைரஸ் பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவ ஆலோசனை இன்றி ஆன்டிபயோடிக் மற்றும் காய்ச்சல் மருந்துகளை உட்கொண்டால் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்.  இன்று வைரஸ் காய்ச்சல் பரவல் குறித்து மாநிலங்களின் நிலைமையை மத்திய அரசு ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.