இந்திய வம்சாவளியை சேர்ந்த துபாய் சிறுமி ப்ரான்வி குப்தா(7), உலகின் இளம் யோகா ஆசிரியர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மூன்றரை வயதிலிருந்து யோகா கற்றுக்கொள்ள தொடங்கிய இந்த சிறுமி, 200 மணி நேர பயிற்சி வகுப்பை முடித்து, யோகா அலையன்ஸ் அமைப்பால் ஆசிரியராக சான்று அளிக்கப்பட்டார்.

வீட்டில் தம் தாயார் அந்தப் பயிற்சி செய்வதைப் பார்த்து, இவருக்கும் அதன்மீது ஆர்வம் பிறந்தது. தொடக்கத்தில் சில மாதங்கள் தாயார் செய்யும் பயிற்சிகளைப் பார்த்து அதைப்போலவே செய்து வந்தார்.  அமைதியான மனதுடன் கற்கும் விருப்பத்துடன் ஆர்வமுள்ள மாணவி என்று இந்த சிறுமியை அவரது ஆசிரியர் பாராட்டியுள்ளார்.