மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த முறையும் ஆட்சியை பிடிக்க பாஜக அரசு பல்வேறு புதுப்புது முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் Viksit Bharat Sampark என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு மூலம் கிடைத்த வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அவர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பலருக்கும் இந்த மெசேஜ் வந்துள்ளது.