இந்தியாவில் EPF அமைப்பின் கீழ் பணியாளர்கள் அனைவரும் தங்களுக்கான அடிப்படை ஊதியம் மற்றும் அகல விலைப்படி என  12 சதவீதம் ஒரு நிலையான தொகையை பி எப் ஆக செலுத்த வேண்டும். இதில் சேமிக்கப்படும் தொகையை மருத்துவ செலவு மற்றும் கல்வி என பலவற்றுக்கு திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். இருந்தாலும் பிஎஃப் தொகையை பெறுவதில் பலரும் சிக்கல்களை சந்திக்கிறார்கள். இவ்வாறான நிலையில் ஆன்லைன் மூலம் எளிதில் பிஎஃப் தொகையை நீங்கள் பெற முடியும்.

அதற்கு முதலில் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதள பக்கத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக pf பெறுவதற்கான விருப்பத்தை நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

பிறகு PF கணக்கை திறக்க UAN எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை சரியாக உள்ளீடு செய்து அடுத்த பக்கத்தில் Manage – KYC என்ற தேர்வை கிளிக் செய்யவும்.

அதன் பிறகு Online servic என்பதை கிளிக் செய்து  Claim form 31, 19 & 10C) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் திரையில் தோன்றும் பக்கத்தில் உள்ள KYC மற்றும் கூடுதல் சேவைகள் குறித்த அனைத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும்.

பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளிட்டு Verify என்பதைக் கிளிக் செய்து  Proceed for Online Claim என்பதைக் கிளிக் செய்யவும்

அடுத்ததாக  முழு EPF தீர்வு, EPF பகுதி அளவு எடுத்தல் மற்றும் பென்சன் வித்டிராவல் ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து தேவையான தொகையை உள்ளிட்டு, கேட்கப்படும் ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உங்களது இந்த கோரிக்கையை முதலாளி (நிறுவனம்) அங்கீகரித்த உடன் 15 முதல் 20 நாட்களுக்குள் வங்கி கணக்கில் உங்களுடைய PF பணம் செலுத்தப்படும்.