இந்தியன் ஆயில் நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களை  இண்டேன் என்ற பெயரில் சப்ளை செய்து வருகிறது. வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக் செய்த ரெண்டு மூன்று நாட்களுக்குள் இன்டேன்  சிலிண்டர்களை  அதன் ஏஜென்சிகள் சப்ளை செய்து வருகிறார்கள்.  மத்திய அரசு ஆண்டுக்கு 14.2கி.கி, எடை கொண்ட 12 சிலிண்டர் வாங்குபவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.300 மானியம் செலுத்துகிறது.

ஆண்டுக்கு குடும்ப வருமானம் 10 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் இந்த தொகை பெற தகுதியானவர்கள். உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்ததா என்பதை அறிய http://mylpg.in/ என்ற இணையதளத்தில் LPG ஐடியை பதிவிட்டு, சரிபார்க்கலாம். ID தெரியாதவர்கள் உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி IDயை தெரிந்துகொள்ளலாம்.