இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதன்படி தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதை வைத்து மோசடிகள் நடைபெறுகிறது. அதாவது ஏதாவது ஒரு குழுவிலோ அல்லது நண்பர்கள் மூலம் பிரபல கடைகளில் தீபாவளி பரிசு காத்திருப்பதாக ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது.

இதனை நம்பி அந்த லிங்கை கிளிக் செய்தால் அவர்கள் சைபர் குற்றவாளிகளின் வலைகளில் சிக்கி விடுகின்றனர். அதே சமயம் தீபாவளி பரிசு காத்திருப்பதாக ஆசை வார்த்தைகளை நம்பி லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் ஹேக் செய்யப்படும் எனவும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே இலவசத்தை நம்பி ஏமாறாமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.