இந்தியாவில் சமீப காலமாக ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வங்கியில் இருந்து ஊழியர்களைப் போல வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல் உங்களது கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு போலியான இணையதள லிங்க் ஒன்றை அனுப்புகின்றனர்.

அதனை கிளிக் செய்யும்போது ஓடிபி வரும் நிலையில் அதனை அந்த நபரிடம் சொன்னவுடன் வங்கி கணக்கில் இருந்து பணத்தை நொடிப்பொழுதில் எடுத்து விடுகிறார்கள். இதனால் பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளித்து வரும் நிலையில் தற்போது புதுச்சேரியில் 40 வயது நபர் ஒருவர் வங்கிக் கணக்கில் இருந்து 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை மர்ம கும்பல் ஒன்று திருடி உள்ளது. அந்த நபரை தொடர்பு கொண்டு ஓடிபி என்னை பகிரச்சொல்லி பணத்தை எடுத்துள்ள நிலையில் யார் கேட்டாலும் ஓடிபி நம்பரை பகிர வேண்டாம் என்று பொது மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.