கோடை காலம் தொடங்கும் முன்பே பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை தலைதூக்க தொடங்கி விட்டது. இதனால் பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு கட்டட உரிமையாளர்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தண்ணீரை வழக்கமாக பயன்படுத்துவதை விட 20% குறைவாக பயன்படுத்த கேட்டுக் கொண்டுள்ளனர். இதை மீறுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.