இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டு வெறும் அடையாள அட்டை இல்லாமல் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் கோதுமை போன்ற உணவுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கவும் பயன்படுகிறது. அது மட்டுமின்றி அரசு வழங்கும் நிதி உதவிகளும் இதன் மூலமாகவே மக்களை சென்றடைகிறது.

இந்த நிலையில் ரேஷன் கார்டில் கேஒய்சி சரி பார்ப்பது அவசியம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்கள் தங்களுடைய கைரேகையை பதிவு செய்து சரி பார்த்துக் கொள்வது அவசியம். மேலும் இதில் செல்போன் நம்பர் மற்றும் ஆதார் கார்டு சரிபார்ப்பும் அடங்கும். இப்படி செய்யாதவர்கள் தொடர்ந்து ரேஷன் பொருட்களை பெற முடியாது. மேலும் தெலுங்கானா மாநிலத்தில் இது கட்டாயம் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆறு உத்தரவாதங்களை அமல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கார்டுகள் உடனே முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.