தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

இதனால் இன்று மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.