இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி பணம் மோசடியில் ஈடுபடுகின்றனர். உங்களது அக்கவுண்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி ஓடிபி எண்ணை கேட்கிறார்கள். அதனைக் கூறிய அடுத்த நிமிடம் போன் காலை துண்டித்து விட்டு அக்கவுண்டில் இருக்கும் மொத்த பணத்தையும் எடுத்து விடுகின்றனர்.

எனவே ஐ வி ஆர் அழைப்பு வரும்போது பொதுமக்கள் கட்டாயமாக வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை பகிரக்கூடாது என்றும் ஏதேனும் மோசடியில் சிக்கி இருந்தால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சந்தேகப்படும்படியாக உங்களது கணக்கில் பணப்பரிவர்த்தனை தோன்றினால் உடனடியாக வங்கி அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.