இந்தியா முழுவதும் பருப்பு விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். அதே சமயம் தக்காளி உட்பட அனைத்து காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போதைய பருவநிலை காரணமாக அரிசியில் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி கடந்த மாதம் அரிசியின் விலையை மத்திய அரசு ஏழு சதவீதம் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அரசு ஏற்றுமதிக்கான ஆதரவு விலை 9 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இந்தியாவில் சராசரி வெப்பநிலையை விட இந்த வருடம் வெப்பநிலை அதிகரித்ததால் அரிசி உற்பத்தி குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.