இலங்கை நாட்டில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அவர்களை ஆட்சியில் இருந்தும் நாட்டை விட்டும் ஓட செய்தனர். இந்த நிலையில் அந்நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரான பசில் ராஜபக்சே தனது அமெரிக்க இரட்டை குடியுரிமையை கைவிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கூறி இருப்பதாவது “என்னுடைய அரசியல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் இரட்டை குடியுரிமை மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. இதனால் நான் மக்கள் பணியாற்ற முடியாமல் தவிக்கிறேன். மேலும் அதனை துறப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதனை அடுத்து குடியுரிமையை ரத்து செய்வதற்கு தேவையான ஆவணங்களை பசில் ராஜபக்சே தயார் செய்து வருகிறார் எனவும் அதன் பின்பு தான் அவர் இலங்கை திரும்புவார் எனவும் தெரிய வந்துள்ளது.