உலகில் உள்ள தொழில்நுட்பங்களின் சக்கரவர்த்தியாக கூகுள் விளங்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக எலான் மஸ்கின் நிறுவனமான ஓப்பன் ஏ ஐ “சார்ட் ஜிபிடி” என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸும் அமேசானின் நிறுவனரான ஜெப் பெசோஸு ம் இணைந்து பெரும் அளவில் முதலீடு செய்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கூகுள் ‘பார்ட்” என்ற செயற்கை நுண்ணறிவு சேவையை அறிமுகம் செய்து உள்ளது. இந்த பார்டு செயற்கை நுண்ணறிவு சேவை ஆர்வத்தினையும் படைப்புத்திறனையும் தூண்டும் வகையில் இருக்கும் எனவும் விண்வெளி போன்ற கடினமான விஷயங்களை கூட குழந்தைகளால் புரிந்து கொள்ளும் வகையில் தான் இந்த பார்டு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பார்டு தொழில்நுட்பத்திற்கு முதல் அடியே பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இதற்கு காரணம் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பின் புதிய கண்டுபிடிப்புகளை பற்றி நான்கு வயது குழந்தைக்கு என்ன சொல்வது என்ற கேள்வியை பார்டு சாட்பாட்டிடம் கேட்டபோது அது தவறான தகவல்களை தந்துள்ளது. இந்த காட்சிகள் பார்டை விளம்பரப்படுத்திய டுவிட்டரிலேயே இடம்பெற்றது. மேலும் தவறு கண்டறியப்பட்டவுடன் இந்த காட்சிகள் உடனடியாக சமூக வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டது. இதனால் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பெர்ட்டின் சந்தை மதிப்பு திடீரென சரிந்தது. இந்த சரிவினால் அந்நிறுவனம் ஒரே நாளில் 10 கோடி ரூபாயை இழந்துள்ளது.