2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் அனைத்து மக்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி அரசு, அரசு பொதுத்துறை, சார்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.