மக்களவைத் தேர்தல் தேதி நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால் தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து நாளை அல்லது நாளை மறுநாள் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.