நடிகர் கமல்ஹாசன் 35 வருடங்களுக்கு பிறகு  இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கமல்ஹாசன் நடிக்கும் Kamal234 திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்டில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திரைக்கதை பணிகள் முடிந்துவிட்டதாகவும், நடிகர்களை தேர்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், 36 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணியானது  மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது.