தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவரை நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் 40 வயதில் யூத் ஐகான் விருது பெற்றுள்ளார். CII-தக்ஷின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டே விருது வாங்கிய அவர், தனது திரைப்பயணம் குறித்து நெகிழ்வாக பேசினார். இவ்வளவு உயரத்திற்கு வருவேன், 40 வயதில் யூத் ஐகான் விருது வாங்குவேன் என்று நான் நினைத்ததே இல்லை. சாதிக்க இன்னும் பல கனவுகள் உள்ளன. இன்னும் நிறைய சாதிக்க விளைகிறேன். இந்த நேரத்தில் எனது பெற்றோருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என நிகழ்ச்சியுடன் பேசினார்.