பிரபல நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் (93) இன்று காலமானார். வயது முதிர்வு நோயால் பாதிக்கப்பட்டு, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறுதிச் சடங்கு இன்று மாலை செம்ப் முஸ்லிம் ஜமியத் பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.