உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக இருக்கும் டுவிட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். அதன் பிறகு டுவிட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த நிலையில் அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் பயன்படுத்தும் டுவிட்டர் ப்ளு டிக்குக்கு மாதந்தோறும் சந்தா கட்ட வேண்டும் என அறிவித்தார். அதன்படி மாதந்தோறும் 900 ரூபாய் இந்திய பயனாளர்கள் சந்தா கட்ட வேண்டும் என மஸ்க் அறிவித்த நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி கால அவகாசம் முடிவடைந்துள்ளது. நேற்றோடு கால அவகாசம் முடிவடைந்த நிலையில் சந்தா செலுத்தாத அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை உலக பிரபலங்களின் டுவிட்டர் ப்ளு டிக் நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கேரள முதல்வர், உத்திரபிரதேச மாநில முதல்வர், டெல்லி முதல்வர், பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் twitter ப்ளு டிக் நீக்கப்பட்டது. இதேபோன்று நடிகர்கள் ரஜினி, விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் டுவிட்டர் ப்ளு டிக்குகள் நீக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இயக்குனர்கள் சங்கர், லோகேஷ் கனகராஜ், கீர்த்தி சுரேஷ், சமந்தா, செல்வராகவன், அட்லீ, கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் டுவிட்டர் ப்ளு டிக்கும் நீக்கப்பட்டுள்ளது. மேலும் அதே நேரத்தில் சந்தா கட்டியவர்களின் ப்ளூ டிக் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.