தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. சோழர்கள் வரலாற்றை மையப்படுத்தி பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுக்கப்பட்டது. இதேபோன்று இயக்குனர் தரணி ராமச்சந்திரன் பாண்டியர்கள் வரலாற்றில் மையப்படுத்தி யாத்திசை என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். சுமார் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ` இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் யாத்திசை திரைப்படம் எப்படி இருக்கிறது சோழர்கள் போன்ற பிரம்மாண்டத்தை கொடுத்தார்களா என்பது குறித்து தற்போது பார்க்கலாம். ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய பேரரசை வெல்வதற்கு சேரன் தலைமையில் சோழப் பேரரசும் சேர்ந்து போர் புரிகிறது. இவர்களுக்கு துணையாக எயினர் மற்றும் வேளிர் போன்ற பழங்குடி கூட்டங்களும் இருக்கிறது. இந்தப் போரின் இறுதியில் ரணதீரன் பாண்டியன் தலைமையிலான பாண்டியர்கள் சோழக்கோட்டையோடு சேர்த்து மொத்த தென் திசையையும் கைப்பற்றுகிறது. இந்தப் போரில் இருந்து உயிர் தப்பிய சில சோழர்கள் காட்டில் மறைந்து வாழ்கிறார்கள். அவர்களுடன் எயினர் சமூகத்தினரும் வாழ்கிறார்கள்.

இந்த சமூகத்தைச் சேர்ந்த கொதி பாண்டியர்களை வீழ்த்தி மீண்டும் சோழப்பேரரசை கையில் எடுப்பேன் என சபதம் செய்கிறார். அவர் சொன்னபடி சோழ அதிகாரத்தை கையில் எடுத்தாரா? பாண்டியர்களை வீழ்த்தினார்.? பாண்டிய மன்னன் தன்னை நோக்கி வரும் எதிரிகளை வீழ்த்தினாரா என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் கதாபாத்திரங்களின் தேர்வு அருமையாக இருக்கிறது. படத்தில் விஎஃப்எக்ஸ் காட்சிகள் குறைவாக இருந்தாலும் படத்தின் கதை அதை பெரிதாக காட்டவில்லை. 8 கோடி பட்ஜெட்டில் இவ்வளவு அருமையான படத்தை எடுக்க முடியும் என இயக்குனர் தரணி ராமச்சந்திரன் நிரூபித்துள்ளார். மேலும் படத்தின் போர் காட்சிகளும் அருமையாக இருக்கிறது.