டிஎன்பிஎல் ஏலம் மகாபலிபுரத்தில் வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

தமிழகத்தில் உள்ளூர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் ஐபிஎல் போலவே, டிஎன்பிஎல் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. சர்வதேச வீரர்களும், உள்ளூர் வீரர்களும் இணைந்து விளையாடும் இந்தப் போட்டி தமிழகத்தில் மிகவும் பிரபலமானது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டிஎன்பிஎல் போட்டிக்கான வீரர்கள் தேர்வுக்கான ஏலம் குறித்து டிஎன்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் விளையாட்டு வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டிஎன்பிஎல் முதல் முறையாக ஏலத்தின் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே டிஎன்பிஎல் நிர்வாக குழு, ஒவ்வொரு உரிமையாளரும் 2 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம், அதில் ஒரு வீரர் A அல்லது B பிரிவில் இருந்தும் மற்றொரு வீரர் C அல்லது D பிரிவில் இருந்தும் உள்ளார். மேலும் ஒவ்வொரு அணிக்கும் மொத்த ஏலத்தொகை ரூ.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ஏ வீரர் ரூ. 10 லட்சம், பி பிரிவு வீரர் ரூ. 6 லட்சம், சி பிரிவு வீரர் ரூ. 3 லட்சமும், டி பிரிவு வீரருக்கு ரூ. 1.50 லட்சம் அடிப்படைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் A பிரிவு வீரர் – சர்வதேச போட்டிகளில் விளையாடியவர், பிரிவு B வீரர் – பிசிசிஐ உள்நாட்டுப் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்கள், C பிரிவு வீரர் – A மற்றும் B பிரிவில் இடம்பெறாத மற்றும் குறைந்தது 30 டிஎன்பிஎல் போட்டிகளுக்கு மேல் விளையாடிய வீரர், வகை D வீரர் – மற்ற வீரர்கள். தக்கவைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள்:

1) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – ஜெகதீசன் (பி பிரிவு), சசிதேவ் (பிரிவு சி) – ரூ.61 லட்சம்

2) நெல்லை ராயல் கிங்ஸ் – அஜித்ஸ் (பி பிரிவு), கார்த்திக் மணிகண்டன் (பிரிவு டி) – ரூ.62.50 லட்சம்

3) ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ்  – துஷார் ரஹேஜா (பிரிவு D) – ரூ.68.50 லட்சம்

4) லைகா சூப்பர் கிங்ஸ் – ஷாருக்கான் (பி பிரிவு), சுரேஷ் குமார் (பிரிவு டி) – ரூ.62.50 லட்சம்

5) திண்டுக்கல் டிராகன்ஸ் – ரவிச்சந்திரன் அஷ்வின் (ஏ பிரிவு) – ரூ.60 லட்சம்

6) ரூபி திருச்சி வாரியர்ஸ் – ஆண்டனி தாஸ் (பி பிரிவு) – ரூ.64 லட்சம்

7) சேலம் ஸ்பார்டன்ஸ் – கணேஷ் மூர்த்தி (சி பிரிவு) – ரூ.67 லட்சம்

8.) மதுரை பாந்தர்ஸ் – கௌதம் (பிரிவு டி) – ரூ.68.50 லட்சம்