தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்த தனுஷ் அவரின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த வருடம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். மகன்கள் இருவரும் அம்மா மற்றும் அப்பா இருவரது வீட்டிலும் வசித்து வருகிறார்கள். இவர்களின் பிரிவிற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

இந்நிலையில் தனுஷின் பழைய வீடியோ ஒன்றை இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது. அதாவது தனக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ஒரு மகள் இல்லையே என்ற வருத்தம் இருந்ததாகவும் தற்போது தனது அண்ணன் செல்வராகவனின் மகள் லீலாவதி தன் மீது வைத்துள்ள பாசம் தனக்கு மகள் இல்லாத கவலை சென்று விட்டது எனவும் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.