ஒரு தலை ராகம், என் தங்கை கல்யாணி, ரயில் பயணங்களில், உயிர் உள்ளவரை உஷா போன்ற பல பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்து நட்சத்திர இயக்குனராக வலம் வருகிறார். சினிமாவில் இன்று வரை ஆக்டிவாக இருக்கும் ராஜேந்திரர் எப்பொழுதும் தாடியோடு தான் காட்சியளிப்பார். இவரை தாடி இல்லாமல் பார்ப்பது அபூர்வம். இவருடைய இந்த தாடிக்கு பின்னால் ஒரு காரணம் இருப்பதாகவும் இவருடைய தாடிக்கு பின் ஒரு பெண் இருப்பதாகவும் டி. ராஜேந்திரனின் நண்பரும் நடிகருமான தியாகு கூறியுள்ளார்.

அதாவது பேட்டி ஒன்றில் பேசிய அவர் டிஆர் தாடி வளர்க்க காதல் தோல்விதான் காரணம். அவர் உஷா என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் ஒரே தெரு தான். இவர்கள் காதலுக்கு வீட்டில் சம்மதம் இல்லாததால் பிரிந்து விட்டார்கள். காதல் தோல்வியால் தான் இவர் இன்று வரை தாடி வைத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். இதை பார்த்த ரசிகர்கள் தாடிக்கு பின்னால் இப்படி ஒரு சோக கதையா என்று ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகிறார்கள்