நடிகர் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெய்லர் படத்திற்கான படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. அதே போல, LEO  திரைப்படத்திற்கான படப்பிடிப்பும்  முடிவடைந்த நிலையில், ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி அல்லது மார்ச் 2024 இல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக ரஜினிகாந்த் TJ  ஞானவேல் இயக்கும் தனது  170 வது படத்திற்கான படப்பிடிப்பையும் முடித்து விடுவார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களும் லியோ படம் ரிலீஸ் ஆன பிறகு தலைவர் 171 வது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை  ஆரம்பித்து விடுவார் எனவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் அவர்களே இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.