குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தனது 19 வயது மகள் காணவில்லை என்று ஒரு தந்தை போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து விசாரித்தபோதுதான், அந்தத் தந்தை கடந்த நான்கு ஆண்டுகளாகத் தன் மகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. 15 வயதிலிருந்தே அந்தப் பெண்ணிற்கு ஆபாசப் படங்களைக் காட்டியும், டிவி சத்தத்தை அதிகமாக வைத்து அவர் அலறுவதை மறைத்தும் அந்த நபர் இந்தக் கொடுமையைச் செய்து வந்துள்ளார்.
மகளின் புகாரைத் தொடர்ந்து போலீசார் அந்த நபரைத் தீவிரமாக விசாரித்தபோது, அவர் தனது 17 வயது மருமகளையும் (தங்கையின் மகள்) கடந்த ஏழு வருடங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்த திடுக்கிடும் உண்மையை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மாற்றுத்திறனாளி என்பதும், அவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
தந்தை என்ற போர்வையில் இருந்த இந்த மிருகத்தின் செயலால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கும் தற்போது முறையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், படுக்கையில் இருக்கும் அந்த நபரின் மனைவிக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்ய மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெத்த மகளையே வேட்டையாடிய இந்தச் சம்பவம் குஜராத் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
