மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வாங்கிய வீராங்கனைகளின் பட்டியல் மற்றும் முழு அணியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :

பிப்ரவரி 13 திங்கள் (நேற்று) அன்று மும்பையில் நடந்த மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2023 ஏலத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் வாங்கிய வீரர்களின் முழு பட்டியல் இதோ. இதில் வெளிநாட்டு வீராங்கனைகளில் அதிக விலைக்கு ஏலம் போனவராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லீக் கார்ட்னர் (ரூ. 3.2 கோடி) இருக்கிறார். அதேபோல இங்கிலாந்து வீராங்கனை நாட் ஸ்கிவரை இதே விலையான ரூ.3.2 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளது. ஆஷ்லீக்கை குஜராத் தட்டி தூக்கியுள்ளது.

WPL 2023 ஏலத்தில் வாங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனைகள் : ஆஷ்லீக் கார்ட்னர் (ரூ. 3.2 கோடி), பெத் மூனி (ரூ. 2.2 கோடி), சோபியா டன்க்லி (ரூ. 60 லட்சம்), அனாபெல் சதர்லேண்ட் (INR 70 லட்சம்), ஹர்லீன் தியோல் (INR 40 லட்சம்), டீன்ட்ரா டாட்டின் (INR 60 லட்சம்), சினே ராணா (INR 75 லட்சம்), சபினேனி மேகனா (INR 30 லட்சம்), ஜார்ஜியா வேர்ஹாம் (INR 75 லட்சம்), மான்சி ஜோஷி (INR 30 லட்சம்), தயாளன் ஹேமலதா (INR 30 லட்சம்), மோனிகா படேல் (INR 30 லட்சம்), தனுஜா கன்வர் (INR 50 லட்சம்), சுஷ்மா வர்மா (INR 60 லட்சம்), ஹர்லி காலா (INR 10 லட்சம்), பருணிகா சிசோடியா (INR 10 லட்சம்), ஷப்னம் ஷகீல் (INR 10 லட்சம்), அஷ்வனி குமாரி (INR 35 லட்சம்).

மீதமுள்ள தொகை : 5 லட்சம் ரூபாய்

வீராங்கனைகள் பலம் : 18/18

வெளிநாட்டு வீராங்கனைகள் : 6/6

குஜராத் ஜெயண்ட்ஸ் WPL 2023 அணி : 

பேட்டர்ஸ் :

சோபியா டன்க்லி, சபினேனி மேகனா

பந்துவீச்சாளர்கள் :

மோனிகா படேல், பருணிகா சிசோடியா, ஷப்னம் ஷகீல்

விக்கெட் கீப்பர்கள் :

பெத் மூனி, சுஷ்மா வர்மா

ஆல்-ரவுண்டர்கள் :

ஆஷ்லீக் கார்ட்னர், ஹர்லீன் தியோல், டியாண்ட்ரா டாட்டின், அனாபெல் சதர்லேண்ட், சினே ராணா, ஜார்ஜியா வேர்ஹாம், மான்சி ஜோஷி, தயாளன் ஹேமலதா, தனுஜா கன்வர், ஹர்லி கலா, அஷ்வனி குமார்