தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெற 1.50 கோடிக்கும் மேலானோர் விண்ணப்பங்களை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, 2 கட்டங்களாக நடந்தமுகாமில் ஏறத்தாழ 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.