தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பயனாளர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது .இது திட்டத்தில் இணையும் பெண்கள் ஆண்டு குடும்ப வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் . வருடம் முழுவதும் பயன்படுத்திய மின்சாரம் 3600 யூனிட்டுக்கு குறைவாக இருக்க வேண்டும். சொந்த பயன்பாட்டு கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது. இந்த திட்டத்தில் புதிய ரேஷன் கார்டு அட்டை வைத்திருப்பவர்கள் இணைய விரும்பினார்கள்.

ஆனாலும் மக்களவைத் தேர்தல் பணி, நிதி பிரச்சனை காரணமாக இந்த திட்டத்தில் புதிய பயனாளர்கள் இணைக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில் திட்டத்தில் புதிய பயனாளர்கள் இணைப்பு தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அதாவது, “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் விண்ணப்பம் பெறப்பட்டு அதில் தகுதியுடைய அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். நிதி  ஒதுக்கும் நிதி அமைச்சரே மூன்று மாத காலத்தில் திட்டம் விரிவு படுத்தப்படும் என்று தெரிவித்திருப்பதால் ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்குள் புதிய  பயனாளர்கள் இணைக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.