தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இனி மாதந்தோறும் 15ஆம் தேதி உரிமை தொகை மகளிர் வங்கி கணக்குகளின் செலுத்தப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அக்டோபர் மாதத்திற்கான உரிமை தொகை 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் அக்டோபர் 14ஆம் தேதி வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் வங்கிகளில் பல காரணங்களால் மகளிர் உரிமைத் தொகை பிடித்தம் செய்யப்பட்ட நிலையில் இது அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு தற்போது உரிமை தொகைகளை பிடித்தம் செய்யக்கூடாது என்று வங்கிகளுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதனைப் போலவே இனி இது போல் பிடித்தம் செய்யப்படும் வங்கிகளில் உள்ள கணக்குகள் வேறு வங்கிக்கு மாற்றப்படும் என்றும் இது குறித்த புகார்களை 1100 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்த முறை மகளிர் உரிமை தொகையை வங்கிகளில் பிடுத்தம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.