மகரம் ராசி அன்பர்களே,

இன்று மிகவும் அற்புதமான நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை புரிந்து கொள்ள வேண்டும். சராசரியான அளவில் பண வரவு கிடைக்கும். பயன்படாத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளிலும் வெற்றி இருக்கும். எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி சென்று விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்படும்.

பண வரவு தேவைக்கேற்றபடி தான் இருக்கும். கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்த வேண்டாம். உங்கள் வேலையை மட்டும் பார்ப்பது நல்லது. மந்தமான நிலையில் இருந்து கண்டிப்பாக மாற வேண்டும். இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். சில விஷயங்களை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்ல வேண்டும்.

பிள்ளைகள் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று மாணவர்கள் பொறுப்பாக இருங்கள். படிப்பில் அக்கறை கொள்ளுங்கள். மூடநம்பிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டாம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் மூன்று

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்