குஜராத் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது மகனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகப் பொதுச் சாலையை மறித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட விரும்பிய அந்தத் தொழிலதிபர், முக்கியச் சாலையில் வாகனங்களை நிறுத்தி சுமார் ஐந்து நிமிடங்கள் போக்குவரத்தைத் தடை செய்துள்ளார்.
இதனால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். சமூக வலைதளங்களில் இது தொடர்பான காணொளிகள் பரவியதை அடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த அவரது செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
A businessman in Gujarat caused a public uproar when he stopped traffic and set off firecrackers to mark his son’s birthday. Deepak Ijardar’s actions, which included threatening motorists with fireworks, were captured on camera and widely shared online. When confronted about the… pic.twitter.com/8TRTXzX78v
— Political Critic (@PCSurveysIndia) December 23, 2025
“>
இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், இது ஒரு தீவிரமான குற்றச்செயல் அல்ல என்று தெரிவித்துள்ளனர். போக்குவரத்து ஐந்து நிமிடங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டதால், இதில் பெரிய அளவிலான சட்ட மீறல்கள் ஏதும் இல்லை எனக் கருதி அந்தத் தொழிலதிபர் மீது கடுமையான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் பண பலம் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி பொதுச் சொத்தான சாலையைத் தனிப்பட்ட கொண்டாட்டத்திற்காக மறிப்பது முறையற்றது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
