
உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் மனதை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. சுசில் சர்மா என்ற 45 வயது நபரின் மனைவி கிரண். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் சுனில் ஷர்மா தனது இரண்டாவது மகன் சர்தக் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.