இந்தியா என்ற பெயர் ஆங்கிலத்திலும் பாரத் ஆகுமா என்ற செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி பர்ஹான் ஹக் பதில் அளித்துள்ளார். நாட்டின் பெயரை மாற்றுவது தொடர்பாக எந்த நாட்டில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் ஐக்கிய நாடுகள் சபை பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார். துருக்கியின் பெயரை துர்க்கிய் என மாற்றும் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை சாதகமாக பதில் அளித்ததை அவர் நினைவு படுத்தினார். அதனைப் போலவே இந்தியா என்பதை பாரத் என பெயர் மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டால் பாரத் என மாற்றம் செய்ய ஐநா தயாராக உள்ளது.